டார்க் நைட், டார்க் நைட் ரிட்டர்ன்ஸ் படங்களை தொடர்ந்து ஸாக் ஸ்னைடர் இயக்கத்தில் பென் ஆப்லெக் பேட்மேனாக நடித்த, ‘பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன், ‘ஜஸ்டிஸ் லீக்’ ஆகிய படங்கள் வெளியாயின.
மைக்கேல் கீடன், வால் கில்மர், ஜார்ஜ் கிளூனி உள்ளிட்ட பல நடிகர்கள் பேட்மேன் கதாபாத்திரத்தில் இதுவரை நடித்துள்ளனர். ஆனால், கிறிஸ்டியன் பேல் நடிப்பில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வந்த ‘பேட்மேன் பிகின்ஸ்’ திரைப்படம் மட்டுமே பேட்மேன் கதாபாத்திரம் எப்படி உருவானது என்பதைச் சொல்லியது.
தற்போது ராபர்ட் பேட்டின்சன் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்து மேட் ரீவ்ஸ் இந்த படத்தை , ‘தி பேட்மேன்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. கொரோனா பரவல் அதிகரித்து இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது முழுமையாக படப்பிடிப்புப் பணிகள் முடிந்து ‘தி பேட்மேன்’ படம் வெளியாக தயாராகியுள்ளது.
இப்படம் வரும் மார்சி 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதனுடன் படத்தின் இரண்டு பிரத்யேக போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.