உலர் திராட்சைவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கக்கூடிய உணவு பொருள்களில் முக்கியமாக கருதப்படுவது உலர் திராட்சை. இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக உடலில் ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் இந்த உலர் திராட்சை சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான ரத்த சிவப்பணு உற்பத்தியை அதிகரிக்கிறது.
எனவே உலர் திராட்சையை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.