Tamilstar
Health

நெய்யில் இருக்கும் நன்மைகள்..!

The benefits of ghee

நெய்யில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் முக்கியமான ஒன்று நெய். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.

மூளையின் செயல்பாடுகளுக்கும் நரம்புகளை பலப்படுத்துவதற்கும் நெய் மிகவும் பயன்படுகிறது. மூக்கில் நெய் விட்டு வந்தால் மன அழுத்தம் ,பதற்றம், நீங்கி நினைவாற்றலை அதிகரிக்கும்.

மேலும் தலைவலி பிரச்சனை அதிகமாக வரும் பொழுது இரவில் தூங்கும் போது மூக்கில் நெய் விட வேண்டும்.

குறிப்பாக பளபளப்பான சருமத்திற்கும், முகப்புள்ளிகள் நீங்கவும், இது உதவும்.

மேலும் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கி முடியை வலிமையாக வளர உதவுகிறது. முக்கிய குறிப்பாக வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் அது நம் உடலுக்கு பல ஆரோக்கியமான நன்மைகளை கொடுக்கும் என தெரிந்து கொள்வோம்.