திராட்சையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பெரும்பாலும் அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று திராட்சை. இதில் பொட்டாசியம், கால்சியம் ,பாஸ்பரஸ், வைட்டமின் ஏ ,மற்றும் பி6 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இதில் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்திருப்பதால் புற்றுநோய் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோயினால் வரும் ஆபத்தை குறைக்க உதவுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் இதில் இருக்கும் வைட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
மேலும் புற்றுநோய் அல்சைமர் உடலில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்து விடுபடவும் உதவுகிறது. குறிப்பாக இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான பிரச்சனையை நீக்கி மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து தீர்வு கிடைக்க உதவுகிறது.