Tamilstar
Health

முலாம்பழத்தில் இருக்கும் நன்மைகள்..!

The benefits of muskmelon

முலாம்பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

கோடை காலத்தில் பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று முலாம் பழம். நீரேற்றம் நிறைந்த பழமாக இருப்பதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் தண்ணீர் பற்றாக்குறையை நீக்கவும். இது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

இதில் வைட்டமின் சி ஏ ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இந்த பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கல் பிரச்சனை வருவதை தடுக்கலாம். இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட இயலும்.

குறிப்பாக நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியும் முலாம் பழத்தில் இருக்கும் விதைகள் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவுவது மட்டுமில்லாமல் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கவும் பயன்படுகிறது.

உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த பழம் சாப்பிட்டால் ரத்தத்தை சீராக்கி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

எனவே முலாம் பழத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் அறிந்து கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.