சேப்பங்கிழங்கு கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
சமைக்க பயன்படுத்தப்படும் காய்கறிகளின் முக்கியமான ஒன்று சேப்பங்கிழங்கு. இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை கட்டுப்படுத்த பல்வேறு டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள். அப்படி உடல் எடையை குறைக்கவும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் இந்த சேப்பங்கிழங்கு கீரை பயன்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் இதயம் சம்பந்தப்பட்ட நோய் வராமல் பாதுகாக்கவும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்து விடுபடவும், மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கவும் பயன்படுகிறது.
குறிப்பாக ரதத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
எனவே ஆரோக்கியமும் பல்வேறு மருத்துவ குணங்களும் நிறைந்த சேப்பங்கிழங்கு கீரை பயன்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.