வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே காலையில் டீ காபி குடித்து நாளை தொடங்குவது வழக்கமான ஒன்று. இது உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவும். ஆனால் காபி அளவிற்கு அதிகமாக வெறும் வயிற்றில் குடிக்கும்போது அது உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடும்.
இது மட்டும் இல்லாமல் இதயம் சம்பந்தப்பட்ட நோய் வரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் குடலின் சமநிலையை சீர்குலைத்து விடும்.
முக்கிய குறிப்பாக உடல் எடை வேகமாக அதிகரிக்கும். எனவே எந்த ஒரு உணவு பொருளையும் அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.