Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அப்போ ஆக்‌ஷன்…. இப்போ ரொமான்ஸ் – மணாலியில் லெஜண்ட் சரவணன்

The Legend In Manali Shooting in Full Swing

தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் லெஜண்ட் சரவணன் அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர்.

இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மணாலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு நடிகர் லெஜண்ட் சரவணன், நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கும் ரொமாண்டிக் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் லெஜண்ட் சரவணன் நடித்த ஆக்‌ஷன் காட்சியின் போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.