பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் உதவி செய்தார். அவர் செய்த உதவியால் ஏராளமான பொதுமக்கள் அவரை கடவுள் போல் வழிபட்டனர். சமீபத்தில் கூட தெலுங்கானா மாநிலத்தில் அவருக்காக கோவில் கட்டப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு பிறந்த குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், குறைமாதத்தில் பிறந்ததால் எடை குறைந்து இருப்பதாகவும் தனக்கு உதவும்படி சமூக வலைத்தளம் மூலம் பெண் ஒருவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்ற சோனு சூட் மருத்துவமனையிடம் தொடர்பு கொண்டு, அந்த பெண்ணுக்கு கவலைப்பட வேண்டாம், எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அந்த குழந்தை நல்ல நிலைமையுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அந்தத் தாய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சோனு சூட் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டதோடு, தனது மகனுக்கு ’சோனு’ என்ற பெயரை வைத்துள்ளதாகவும் அவருடைய உதவியால்தான் தன்னுடைய குழந்தை பிழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையிலேயே சோனுசூட் அவர்கள் மீது தான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதாகவும் அவருடைய உதவிக்கு மிகப்பெரிய நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த தாய் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Another SONU in the house. 🤗
Thanks Dr Sukumar @INCORHospitals .👍@IlaajIndia https://t.co/eVBJQfPujD
— sonu sood (@SonuSood) December 31, 2020