Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“நீங்க அதை பார்த்துக்கோங்க நான் இதை பார்த்துக்கிறேன்”: கோட் படத்தில் சிவகார்த்திகேயன் மாஸ் டயலாக்

the next Thalapathy Ready for Goat Movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் திரைப்படம் நேற்று வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் ஏஜிஎஸ் என்டர்டைமென்ட் நிறுவனம் சார்பில், கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ்,கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாக்கியுள்ளது.ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த் ,பிரபுதேவா, யோகி பாபு ,பார்வதி நாயர் விடிவி. கணேஷ், பிரேம்ஜி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் நான் ஒரு கோடி பட்ஜெட்டில் உருவானது என்பதை இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக கிட்டத்தட்ட ஐந்தாயிரம் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி மாஸ் காட்டியது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஒரு சீனில் விஜய் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கையில் கொடுத்து துப்பாக்கிய பிடிங்க சிவா என்று சொல்லுவார். அடுத்து “நீங்க இதைவிட ஏதோ முக்கியமான வேலையா போறீங்க, நீங்க அதை பார்த்துக்கோங்க நான் இதை பார்த்துக்கிறேன்” என்று சிவகார்த்திகேயன் பேசி இருப்பார். இந்த வசனத்தை ரசிகர்கள் பலரும் வைரல் செய்து வருகின்றனர்.

தளபதி 69 படத்திற்கு பிறகு தளபதி விஜய் முழு நேர அரசியல் வேலைகளில் ஈடுபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

the next Thalapathy Ready for Goat Movie
the next Thalapathy Ready for Goat Movie