2021 ஆம் வருடம் ஆரம்பத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
இதனால் பெரும்பாலான திரைப்படங்கள் OTT தளங்களில் தான் வெளியாகி வந்தன. மேலும் பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு மக்களை திரையரங்கிற்கு வரவழைக்கும் அளவிற்கு நல்ல திரைப்படங்களை எதிர்பார்த்து இருந்தனர்.
அந்த வகையில் இந்தாண்டு மாஸ்டர், டாக்டர், மாநாடு உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்கிற்கு வந்த பார்வையாளர்களை ஏமாற்றம் அளிக்காத படி இருந்தது.
இதனிடையே தற்போது அடுத்த வருடம் வெளியாகவுள்ள திரைப்படங்களை எதிர்பார்த்து உள்ளனர் ரசிகர்கள்.