நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி இந்தியில் பிக்பாஸ் 9-வது சீசனில் போட்டியாளராகப் பங்கு பெற்றார். இதையடுத்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார்.
தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை டிகங்கனா சூர்யவன்ஷியை மயில் ஒன்று தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் மயில் அருகே சென்றபோது, அது சட்டென்று பறந்து தன் காலால், அவர் முகத்தில் தாக்குவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளன.
இதை சற்றும் எதிர்பார்த்திராத நடிகை டிகங்கனா, பயத்தில் அலறிப்போனார்.
View this post on Instagram