சிறுநீரகம் பாதிக்காமல் இருக்க நாம் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். வாங்க பார்க்கலாம்.
நம் உடலில் உள்ள உறுப்புகளில் முக்கியமான ஒன்று சிறுநீரகம். இதற்கு பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
முதலில் சிறுநீரக செயல்பாட்டிற்கு உணவு முறை முக்கிய பங்கு வகித்து வருகிறது.
நம் உணவில் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால் அது நம் உடலுக்கு சிறுநீரக நோய்களை உருவாக்கி நம் உடலை மோசமாக்கும். அதிலிருந்து விலக நாம் இங்கே சில உணவுகளை பற்றி பார்க்கலாம்.
பொதுவாக பழங்களில் அண்ணாச்சி பழம் சாப்பிடுவது சிறந்தது.
இந்தப் பழம் உணவில் சேர்ப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சிறுநீரக வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
காய்கறிகளில் குடைமிளகாய் சிறுநீரக நோயாளிகளுக்கு பெருமளவில் உதவும். குடைமிளகாயில் வைட்டமின் சி மாங்கனிசு மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் காளான் சாப்பிடுவதால் அதில் வைட்டமின் பி மற்றும் செலினியம் இருப்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இறுதியில் முட்டைகோஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது இதில் வைட்டமின் கே இருப்பதால் நோயாளிகளுக்கு சிறந்த உணவாகவும் அமைகிறது.