தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை வம்சி பைடம்பல்லி இயக்கி உள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தில் ராஜு இந்த படத்தின் கதையை தெலுங்கு சினிமாவில் மூன்று நடிகர்கள் நிராகரித்த விஷயம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்குனர் இந்த கதையை சொன்னதும் அவருக்கு மகேஷ் பாபு வைத்து படம் பண்ணலாம் என தோன்றியுள்ளது. ஆனால் அவர் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படத்தை நிராகரிக்க பிறகு ராம்சரனிடம் கூறியுள்ளனர். ராம் சரணம் பிசியாக இருக்க இந்த படத்தை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.
அதன் பிறகு அல்லு அர்ஜுன் பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்களை நடிக்க வைக்கலாம் என பார்க்க அவர்களும் மற்ற படங்களில் பிசியாக இருந்த காரணத்தினால் தளபதி விஜய்யிடம் இந்த கதையை கூறியதாக சொல்லியுள்ளார். கதையைக் கேட்ட 30 நிமிடத்தில் அவர் நடிக்க ஓகே சொல்லிவிட்டதாக தில் ராஜு தெரிவித்துள்ளார்.
தில் ராஜுவின் இந்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
First I Choose Mahesh Babu As A Hero For Varisu Movie – Dill Raj🔥 pic.twitter.com/Mb7nrfDgmb
— Naveen MB Vizag (@NaveenMBVizag) December 15, 2022