Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜப்பானை கலக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் பாடல்.!! வைரலாகும் வீடியோ பதிவு

thiruchitrambalam movie song reach to japan

தென்னிந்திய திரை உலகில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்திருந்தது. இதில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இதில் அனிருத் இசையில் இடம்பெற்றிருந்த ‘மேகம் கருக்காதா’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. பலரும் இப்பாடலுக்கு வைப் செய்து இணையத்தை அதிரவிட்டனர். இந்நிலையில் இப்பாடலின் ஜப்பான் வர்ஷனை அந்நாட்டின் நடன கலைஞர் ஒருவர் ரீமேக் செய்துள்ளார். Kaketaku என்ற நடன கலைஞர் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.