தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கியுள்ளார். ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் ரிலீஸ் தள்ளிப் போய் வந்த நிலையில் நேற்று அக்டோபர் 30ஆம் தேதி படம் அமேசான் ப்ரைம் வீடியோவல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளியான பொன் மகள் வந்தாள் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் அமேசான் வீடியோவில் வெளியானது. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் சூர்யாவின் மீது கடும் கோபம் அடைந்தனர்.
இனி சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர்களின் படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் அவர்கள் OTT வழியாகவே வெளியிட்டு கொள்ளட்டும் என்று கூறி இருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய தயாரிப்பில் தானே நாயகனாக நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தையும் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியிடுவது திரையரங்கு உரிமையாளர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு கொண்டுள்ளது.
திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நடிகர் சூர்யா சுயநலமாக யோசிக்கிறார். ஏணியாக இருந்து அவரை உயரத்திற்கு கொண்டு சென்ற விநியோகஸ்தர்களை அவர் மறந்து விட்டார் என கூறியுள்ளார்.
இதுவரை OTT-ல் வெளியான அத்தனை மாதிரி படங்களும் தோல்வி தான். இதனால் சூரரைப்போற்று படம் வெற்றியடைவதும் கொஞ்சம் கடினம் தான்.