Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

திருவின் குரல் திரை விமர்சனம்

thiruvin-kural movie review

நாயகன் அருள்நிதிக்கு வாய் பேச முடியாது மற்றும் காது சிறிதளவு கேட்கும். இவர் தந்தை பாரதிராஜா உடன் இணைந்து கட்டிட வேலை பார்த்து வருகிறார். ஒரு நாள் கட்டிட வேலையின் போது பாரதிராஜாவுக்கு விபத்து ஏற்படுகிறது. இவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கிறார் அருள்நிதி. மருத்துவமனையில் பணிபுரியும் நான்கு நபர்களுக்கும் அருள்நிதிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் அந்த நான்கு நபர்கள் செய்யும் குற்றங்களுக்கும் அருள்நிதி தடையாக நிற்கிறார்.

இதனால் கோபமடையும் நான்கு பேரும், அருள் நிதியை பழிவாங்க நினைக்கிறார்கள். இறுதியில் தந்தை பாரதிராஜாவை அரசு மருத்துவமனையில் இருந்து அருள் நிதி காப்பாற்றினாரா? நான்கு நபர்களின் தொந்தரவை எப்படி அருள்நிதி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருள்நிதி திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வசனம் ஏதும் இல்லாமல் முக அசைவுகள் உடல் மொழியால் நடித்து பாராட்டை பெற்று இருக்கிறார். குறிப்பாக காதல் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். கிளைமாக்சில் நெகிழ வைத்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆத்மிகா அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பெரியதாக வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார் பாரதிராஜா. வில்லன்களாக நடித்திருக்கும் நான்கு நபர்களும் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். எளிய கதையை வித்தியாசமான திரைக்கதை மூலம் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரிஷ் பிரபு. மருத்துவமனையில் நடக்கும் அவலங்களை துணிச்சலோடு சொல்லி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கொஞ்சம் இரைச்சலை தவிர்த்து இருக்கலாம். சின்டோவின் ஒளிப்பதிவு சிறப்பு. மொத்தத்தில் திருவின் குரல் சிறப்பு.

thiruvin-kural movie review
thiruvin-kural movie review