விஜய் தொலைக்காட்சியின் வெற்றிகரமாக நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
இதன், ஜூனியர் சீசன் 8 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல சிறுவர், சிறுமிகள் பங்கேற்று வருகிறார்கள்.
இதில் குறிப்பாக கிரிஷாங் எனும் சிறுவன் முதல் சுற்றில் இருந்தே நன்றாக பாடி வர, அணைத்து நடுவர்களும் கிரிஷாங்கை பாராட்டி தள்ளினார்கள்.
கடந்த வாரம் நடைபெற்ற போட்டியிலும், சிறப்பாக பாடிய கிரிஷாங்கை சித்ரா, ஷங்கர் மகாதேவன், கல்பனா ஆகியோர் பாராட்டினர்.
இவர்களை எல்லாம் விட, ஒரு படி மேலே சென்று, ‘நீ தான் குட்டி எஸ்.பி.பி’ என்று எஸ்.பி. சரண் பாராட்டியுள்ளார்.