தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஊர்வசி. 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் குழலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.
அதில் ஊர்வசி பேசும்போது, பல வருடங்களாக எனது அண்ணன் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன், ஆனால் நடக்கவில்லை. தற்போது அண்ணன் ஒரு படம் எடுத்திருக்கிறார்.
அதை நினைத்து நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனந்த கண்ணீருடன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
முக்குழி பிலிம்ஸ் தயாரிக்கும் குழலி திரைப்படத்தை செரா.கலையரசன் இயக்கி இருக்கிறார். காக்காமுட்டை திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக நடிகை ஆரா இணைந்து நடிக்கிறார். டி.எம்.உதயகுமார் இசையமைக்க, ஷாமிர் ஒளிப்பதிவினையும் தியாகு படத்தொகுப்பினை மேற்கொள்கிறார்கள். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை விரைவில் வெளியிட இருக்கிறது.