Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“தக் லைஃப்”படத்தில் இணைந்த பிரபல நடிகை.படக்குழு அறிவிப்பு

thug-life-movie latest update viral

“பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘தக் லைஃப்’ (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்துள்ளதாக நேற்று படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்திருந்தது.தக் லைஃப் போஸ்டர்இந்நிலையில், இந்த படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லஷ்மி இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருந்தது குறிப்பிடத்தகக்து.