Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கமல்ஹாசனுக்கு வாழ்த்துதெரிவித்து “தக் லைஃப்” படக்குழு வெளியிட்ட பதிவு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘தக் லைஃப்’ (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோவை நேற்று வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கமலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ‘தக் லைஃப்’ (Thug Life) படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.