அல்டிமேட் ஸ்டாராக கோலிவுட் திரை உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் தல அஜித் குமார் நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ‘துணிவு’ திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலானதை தொடர்ந்து 3rd சிங்கிள் ட்ராக் குறித்த அப்டேட்டை ஜிப்ரான் வெளியிட்டுள்ளார்.
அதில் இப்படத்தின் அடுத்த பாடலின் தலைப்பு “கேங்ஸ்டா” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் இணையத்தில் ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வரும் நிலையில் இப்பாடல் இம்மாதம் வரும் 24ஆம் தேதி வெளியாகலாம் என்ற புதிய தகவலும் ரசிகர்களால் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஷபீர் சுல்தான் பாடியுள்ள இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். இப்பாடலின் ரிலீஸ் தேதி தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பை படக்குழு விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Thunivu 3rd single (expected) to release on Dec 24/25 as Christmas special 🎵💥#Ajithkumar #AK
— AmuthaBharathi (@CinemaWithAB) December 20, 2022