தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன், அமீர், பாவனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஜிப்ரான் இசையமைப்பில் உருவாக்கி இருந்த இப்படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான சில்லா சில்லா பாடலின் வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் இப்பாடலை மீண்டும் இணையதளத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
BOOOMMM ! 💥
The wait is over 😎 #ChillaChilla Full Video OUT NOW ! https://t.co/PpMa9DX3d0#Thunivu #NoGutsNoGlory #Ajithkumar #HVinoth @boneykapoor @zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa #RomeoPictures pic.twitter.com/Ss1FmMrWzB
— BayViewProjectsLLP (@BayViewProjOffl) February 22, 2023