தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து உருவாகி வரும் திரைப்படம் தான் துணிவு.
பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்டு அஜித் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் அறிவிக்கப்பட்டது. படத்திற்கு துணிவு என டைட்டில் வைத்திருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2000 ரூபாய் தாளை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான ஒரே நிமிடத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து சாதனை படைத்தது அஜித் ரசிகர்களை உச்சகட்ட கொண்டாட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.