தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் துணிவு.
எச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது.
இந்த நிலையில் கடந்த தீபாவளிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு திரைப்படமாக துணிவு ஒளிபரப்பாகியது. ஆனால் ரேட்டிங் பலமாக அடி வாங்கி இருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆமாம், முதல் முறை 2.24 ரேட்டிங் பெற்ற இந்த திரைப்படம் இரண்டாவது முறை ஒளிபரப்பாகிய போது வெறும் 0.96 ரேட்டிங் புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.