அல்டிமேட் ஸ்டாராக கோலிவுட் திரை உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் அஜித் குமார் நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ‘துணிவு’ திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலானதை தொடர்ந்து 3rd சிங்கிள் பாடலான “கேங்ஸ்டா” பாடல் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகி உள்ளது.
இதனால் அதிக எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் துணிவு திரைப்படம் பொங்கல் வெளியீட்டு குறித்து நியூஸ் பேப்பரில் வெளியான விளம்பரத்தின் புகைப்படத்தை ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
The Day Starts With A Storm, Today's Newspaper Advertisement Of The Movie #Thunivu 😎.
The ORIGINAL #GANGSTAA IS COMING ..!!!🥁🎶#ThunivuPongal | #NoGutsNoGlory | #AjithKumar | #AK. pic.twitter.com/9L3mwhjnrv
— AJITH UK FANS ™ (@AjithUKFans) December 25, 2022