என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக கடந்த மாதம் வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி netflix ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான இப்படம் தற்போது 17 நாடுகளில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் டாப் 10 இடத்தை பிடித்துள்ளது. இந்த தகவலால் உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள் ரியல் வின்னர் அஜித் தான் என்று கூறி இந்த தகவலை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
#AjithKumar's #Thunivu is in the Netflix Top 10 list in 17 countries including India, Malaysia, Srilanka, Kuwait, Bangladesh, etc.,since its OTT release!
— VCD (@VCDtweets) February 13, 2023