Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் துணிவு படத்தின் பணிகள். வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்

thunivu movie post-production-update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான மேற்கொண்ட பார்வை வலிமை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணியில் துணிவு திரைப்படம் வெளியாகிறது.

மஞ்சு வாரியர், சமுத்திரகனி உட்பட எக்கச்சக்கமான நடிகர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியிட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் டப்பிங் பணிகள் மற்றும் ஸ்ட்ராங் சூட்டிங் உள்ளிட்டவை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் துணிவு படத்தை வெளியிட உள்ளது. இந்த படத்துடன் நேரடியாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் மோத உள்ள நிலையில் தற்போது வரை இந்த படத்திற்கு கிடைத்தட்ட 600 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் விரைவில் துணிவு படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

thunivu movie post-production-update

thunivu movie post-production-update