தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் துணிவு.
எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, அமீர், பாவணி, சிபி சந்திரன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் பொங்கலுக்கு போட்டியாக இந்த படத்துடன் மோத உள்ள தளபதி விஜயின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக சமீபத்தில் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் துணிவு படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி ஜனவரி ஒன்றாம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் தயாரிப்பாளர் படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் உட்பட எல்லோரும் கலந்து கொண்டாலும் நடிகர் அஜித் கலந்து கொள்ளவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
விரைவில் இந்த ப்ரமோஷன் நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
