தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் சமுத்திரகனி, சிபிச்சந்திரன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ப்ரமோஷன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஆமாம் சென்னையில் பிரபல திரையரங்கில் துணிவு பொங்கல் ரிலீஸ் என வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்தப் புகைப்படத்தை துணிவு ப்ரமோஷன் ஸ்டார்ட் என அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.