தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இன்னும் இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார்.
இந்த நேரத்தில் ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றின் தளபதி விஜய் வசூல் மன்னனாக மாற நடிகர் சூர்யா விட்டுக்கொடுத்த வாய்ப்பு தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
அதாவது தளபதி விஜயை வசூல் மன்னனாக மாற்றிய திரைப்படம் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகிய 100 கோடி ரூபாய் வசூலை செய்திருந்த இந்த திரைப்படத்தில் முதலில் நடிகையர் இருந்தது சூர்யா தான் என தெரிவித்துள்ளார்.
ஆனால் முருகதாஸ் முதலில் இந்த கதையை சூர்யாவிடம் தான் சொன்னார். ஆனால் சூர்யா இந்த பட வாய்ப்பை விட்டு கொடுத்ததால் தான் விஜய்க்கு இந்த வாய்ப்பு சென்றது என தெரிவித்துள்ளார்.