டிக் டாக் பிரபலமான இலக்கியாவின் வீடியோவில் கவர்ச்சிக்குபஞ்சமிருக்காது. இவருடைய வீடியோக்கள் அனைத்திலும் இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகள் அதிகம் காணப்படும்.
இவரது ஒவ்வொரு வீடியோ விற்கும் அவ்வளவு லைக்குகள் குவியும். விரைவில் படத்தில் படத்தில் பார்க்கலாம் என்று எண்ணத்தில் அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், அவர் ஒரு அடல்ட் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
புதுமுக இயக்குநர் அலெக்சாண்டர் ஆறுமுகம் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘நீ சுடாம வந்தியா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹீரோவாக விக்கி என்பவர் நடிக்கிறார்.
இந்தப் படத்தை தேர்வு செய்வதற்கு இலக்கியா அளித்த பேட்டியில் ”பல இயக்குனர், தயாரிப்பாளர்களிடம் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், அது எனக்கு ஏமாற்றத்தையே தந்தது.
எனது நடிப்பை வெளிக்காட்ட தற்போது கிடைத்த இந்த படத்தை பயன்படுத்துவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” தனது பேட்டியில் கூறியிருந்தார்.
டிக் டாக் முடக்கப்பட்ட பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இலக்கியாவை படத்தில் காணவிருக்கும் செய்தியை கேட்ட ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.