தமிழ் சினிமாவில் நடிகர்கள் நடிகர்களாக இருந்து திரையுலகில் பிரபலமாகவதை போலவே டிக் டாக் நிகழ்ச்சி மூலமாகவும் சிலர் பிரபலமானவர்கள் ஆக மாறி வருகின்றனர்.
அப்படி டிக் டாக் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர்களில் ஒருவர் தான் ஜி பி முத்து. செத்த பயலே நார பயலே என்ற டயலாக் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர் திடீரென குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இன்னொருபுறம் தீராத வயிற்று வலி காரணமாக இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இவற்றில் எது உண்மை என்பது ஜி பி முத்து கூறினால் தான் தெரியவரும்.
ஜிபி முத்துவின் இந்த தற்கொலை முயற்சியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற தவறான முடிவை எடுக்க வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.