டிக்டாக்கில் 1.1 மில்லியன் ரசிகர்கள் கொண்ட மிகப் பிரபலமாக இருந்த சியா கக்கார் என்கிற 16 வயது இளம்பெண், புதுடெல்லியில் அவரது வீட்டில் இன்று (25 ஜூன், 2020) தற்கொலை செய்து கொண்டார்
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை ஏற்படுத்திய சோகத்திலிருந்து இன்னும் பாலிவுட் ரசிகர்கள் மீளவில்லை. தற்போதும் அவரைப் பற்றி தான் சமூக வலைத் தளங்களில் அதிகம் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மற்றொரு பிரபலத்தின் தற்கொலை பற்றிய செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 வயது மட்டுமே ஆன டிக் டாக் ஆர்டிஸ்ட் மற்றும் டான்ஸர் சியா கக்கர் (Siya Kakkar) இன்று (June 25, 2020) தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் இறந்துவிட்டதை அவரது மேனேஜர் அர்ஜுனன் அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளார்.
சியா கக்கர் டிக் டாக்கில் மிகவும் பிரபலமானவர். அவரது நடன திறமைக்காக அவரை அதிக அளவு ரசிகர்கள் விரும்பினார்கள். புது டெல்லியில் உள்ள ப்ரீத் விஹாரில் அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப் பட்டுள்ளார். அவருக்கு சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என அவரது மேனேஜர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவரது மேனேஜர் ஒரு முன்னணி தளத்திற்கு அளித்த பேட்டியில் இது அவரது சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனையால் செய்திருக்கலாம். வேலை விஷயத்தில் அவர் சிறப்பாகவே செய்து கொண்டிருந்தார். ஒரு புதிய பிராஜக்ட்காக அவரிடம் நேற்று இரவு பேசி இருந்தேன். அவர் சகஜமாகதான் பேசினார். நாங்கள் மிக அதிக எண்ணிக்கையிலான ஆர்டிஸ்டுகளுடன் பணியாற்றுகிறோம், சியா ஒரு நல்ல டேலன்ட் (Talent) என மேனேஜர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
சியா பல்வேறு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தார். தனது வீடியோக்களை டிக் டாக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் வெளியிட்டு வந்தார். டிக் டாக்கில் அவருக்கு 1.1 மில்லியன் ரசிகர்கள் இருந்ததை பெருமையாகவே நினைத்தார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்தனர். 6 நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அவர். அதில் ஒரு பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் சியா.
சியா கக்கர் தற்கொலை பற்றி பிரபல போட்டோகிராஃபர் வைரல் பயானி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சியா கக்கர் மேனேஜர் நேற்று இரவு தான் ஒரு பாடல் தொடர்பாக போனில் சியா உடன் பேசினார் என்றும், அப்போது சியா நல்ல மூடில் தான் இருந்தார் என்றும் கூறியுள்ளார். இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன தவறாக நடந்தது என தெரியவில்லை என்றும் மேனேஜர் கூறியதாக போட்டோகிராஃபர் வைரல் பயானி கூறி உள்ளார்.