தமிழ் சின்னத்திரையில் தொலைக்காட்சி சேனல்கள் சில புது புது கேம் ஷோக்களை நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் ஜீ தமிழ் சேனலில் சூப்பர் குயின் என்ற ஒரு புதிய கேம் ஷோ ஜனவரி 16 அன்று ஒளிபரப்பாக தொடங்கியது.
இந்த கேம் ஷோ சீரியல் நடிகைகளை வைத்து நடத்தப்பட்டது. இதற்கு நடுவர்களாக நடிகர் நகுல், மற்றும் நடிகை ராதா கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று இந்த ஷோவின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக யுவன்சங்கர் ராஜா, அஸ்வின், ஆர்யா போன்ற நடிகர்களும் கலந்து கொண்டனர். பின்னர் எல்லா நடிகைகளும் அவரவர் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியில் ‘சூப்பர் குயின்’ பட்டத்தை புது புது அர்த்தங்கள் சீரியலில் நடிக்கும் ‘பார்வதி’ வெற்றி பெற்றார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.