உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் சற்று கடினமாக அமையும். உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக இன்று இருக்கும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துங்கள். அமைதியாக செயல்பட வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
ரிஷபம் : இன்று நீங்கள் மன உறுதியுடனும் பொறுமையுடனும் செயல்களை செய்ய வேண்டும். தாமதங்கள் ஏற்படும். அது உங்களுக்கு கவலையை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
மிதுனம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
கடகம் : இன்று உங்களிடம் இருக்கும் ஆர்வத்தால் நீங்கள் விரைந்து செயல்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் நலனுக்கான முடிவுகளை விரைந்து எடுப்பீர்கள். சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கன்னி : ஆன்மீகத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியை தரும். முன்னேறுவதற்காக இன்று முயற்சி செய்யுங்கள். இறை வழிபாடு இன்றியமையாதது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
துலாம் : இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
விருச்சிகம் : இன்று நீங்கள் சமநிலையுடன் காணப்படுவீர்கள். குறைந்த முயற்சி அதிக பலனை தரும். சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ள வேண்டிய நாள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
தனுசு : இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு பிரியமானவர்களின் இதயத்தில் இன்று இடம் பிடிப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
மகரம் : இன்று மனஅமைதி உண்டாகும். இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலம் கிடைக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கும்பம் : இன்று புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைபளு குறையும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
மீனம் : இன்று நீங்கள் துடிப்புடன் இருப்பீர்கள். வெற்றிக்காக முயற்சி செய்வீர்கள். மனதினை திடமாக வைத்து கொள்வீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5