ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டாம் குரூஸ். இவர் தற்போது மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7ம் பாகத்தில் நடிக்கிறார். இதன் தயாரிப்பாளரும் அவர்தான். இப்படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடைபெற்று வந்தது. அங்கு பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், ‘மிஷன் இம்பாசிபிள் 7’ படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு உள்ளதால், படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஜூன் 14-ந் தேதி வரை படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘மிஷன் இம்பாசிபிள் 7’ படத்தை அடுத்தாண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 6 மாதங்களாக இங்கிலாந்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மிஷன் இம்பாசிபிள் 7 படத்தை கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கி வருகிறார்.