Tamilstar
Health

கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்.. குழந்தைகளை பாதுகாக்க இதை பண்ணுங்க..

Tomato fever Do this to protect children

கேரளாவில் அதிகமாக பரவி வரும் தக்காளி காய்ச்சலில் இருந்து உங்கள் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்று பார்க்கலாம்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தோன்றி உலகம் முழுவதும் அச்சத்தை உண்டாக்கி பல பாதிப்புகளையும் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து குரங்கு காய்ச்சல் மற்றும் தக்காளி காய்ச்சல் என தொடர்ந்து பீதியை கிளப்பி வருகின்றது. இந்த தக்காளி காய்ச்சல் என்பதும் ஒரு வகையான வைரஸ் தொற்று ஆகும்.

இந்த காய்ச்சல் முக்கியமாக ஐந்து வயது குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாக பாதிக்கிறது. இந்தக் காய்ச்சல் வருவதற்கான அறிகுறி சிவப்பு நிற கொப்புளங்கள் குழந்தைகளின் உடலில் காணப்படும். இது மட்டும் இல்லாமல் தோல் எரிச்சல், மூக்கு ஒழுகுதல், அதிகமான காய்ச்சல் ,வயிற்று வலி, தொடர் இருமல், தும்மல், போன்ற பல அறிகுறிகள் இருக்கும்.

தக்காளி காய்ச்சல் குறிப்பிட்ட மாநிலத்தில் குறைவாக தான் பரவி வருகிறது. இருந்தாலும் நாம் அந்த காய்ச்சலில் இருந்து பாதுகாப்பதற்கான வழியை பின்பற்ற வேண்டும்.

உங்கள் குழந்தைகளை வெளியே அனுப்பும் போது சமூக இடைவெளியை பின்பற்றுவதை குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் படுக்கையறை மற்றும் குளியலறையை சுத்தம் செய்ய வேண்டும். அவர்கள் விளையாடும் பொம்மைகளை கிருமி நீக்கம் செய்து சுத்தமாக பயன்படுத்த கொடுக்க வேண்டும்.

தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதை தவிர்த்து விடுவது சிறந்தது. எனவே உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் சிறந்த வழியாகும்.