அளவுக்கு அதிகமாக கற்றாழை எடுத்துக் கொள்ளும் போது அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.
கற்றாழை மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஏனெனில் இதில் பொட்டாசியம் சோடியம் வைட்டமின் ஏ யூரிக் அமில மாங்கனிசு போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்தாலும் இதனை அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் போது அது உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
அதிக அளவில் கற்றாழைச் சாறு உட்கொள்ளும்போது அது இதயத்துடிப்பில் பிரச்சனையை உருவாக்கி விடும். அது மட்டும் இல்லாமல் வயிற்று வலி எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும்.
இது மட்டும் இல்லாமல் கற்றாழையில் இருக்கும் பயோ ஆக்டிவ் காம்பவுண்டுகள் கல்லீரல் பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றத்தாழ்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே கற்றாழை உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என அறிந்து எதனையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.