இந்திய திரையுலகில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் வெளியான திரைப்படங்களின் அடிப்படையில் சிறந்த நடிகைகள் யார்? சிறந்த நடிகர்கள் யார்? என்பது குறித்த விவரங்கள் வெளியாவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான டாப் 10 நடிகைகள் யார் யார் என்பது குறித்த லிஸ்டை ஆர்மாக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த லிஸ்டில் தென்னிந்திய நடிகையான சமந்தா முதலிடம் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் தமிழ் நடிகை நயன்தாரா, நான்காவது இடத்தில் காஜல் அகர்வால் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் கீர்த்தி சுரேஷ் 9 ஆவது இடமும் பூஜாவிற்கு பத்தாவது இடமும் கிடைத்துள்ளது.
பாலிவுட் நடிகையான ஆலியா பட் இரண்டாவது இடம் பிடிக்க தீபிகா படுகோனே ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். கத்ரீனா கைஃப் 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதோ அந்த லிஸ்ட்
1. சமந்தா
2. ஆலியா பட்
3. நயன்தாரா
4. காஜல் அகர்வால்
5. தீபிகா படுகோனே
6. ராஷ்மிகா மந்தனா
7. அனுஷ்கா
8. கத்ரீனா கைப்
9. கீர்த்தி சுரேஷ்
10. பூஜா ஹெக்டே