Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

2022-ல் பாக்ஸ் ஆபீஸில் வசூலில் மாஸ் காட்டி முதலிடம் பிடித்த படங்கள் எது தெரியுமா? முழு விவரம் இதோ

top 10 movies of tamil cinema 2022 update

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அத்தனை படங்களும் வசூலை பெற்று வெற்றி பெறுவது இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைகின்றன. அந்த வகையில் இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த பத்து திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தெரியவந்துள்ளன.

அஜித்தின் வலிமை திரைப்படம் முதல் இடத்திலும் விஜயின் பீஸ்ட் திரைப்படம் இரண்டாவது இடத்திலும் இருக்க மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

1. வலிமை – ரூ.36.17 கோடி
2. பீஸ்ட் – ரூ.27.40 கோடி
3. பொன்னியின் செல்வன் – ரூ.27 கோடி
4. விக்ரம் – ரூ.20.61 கோடி
5. எதற்கும் துணிந்தவன் – ரூ.15.21 கோடி
6. RRR – ரூ.12.73 கோடி
7. திருச்சிற்றம்பலம் – ரூ.9.52 கோடி
8. டான் – ரூ.9.47 கோடி
9. கோப்ரா – ரூ.9.28 கோடி
10. கேஜிஎஃப் 2 – ரூ.8.24 கோடி

top 10 movies of tamil cinema 2022 update
top 10 movies of tamil cinema 2022 update