டிஆர்பியில் இடம் பெற்ற டாப் 10 சீரியல்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி வாரத்திற்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருப்பது வழக்கம். இந்த இரண்டு சேனல்களிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது உண்மை. அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் பட்டியல் பார்க்கலாம்.
முதலிடத்தை கயல் சீரியல் பிடித்துள்ளது. பெரியப்பாவின் மனதில் இருக்கும் வன்மத்தை கண்டுபிடிக்கும் கயல் அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க அவரும் மன்னிக்கிறார். பல தடைகளை தாண்டி விறுவிறுப்பாக கயல் மற்றும் எழிலின் திருமணம் எப்படி நடக்கப்போகிறது என்ற கதை களத்துடன் நகர்கிறது.
இரண்டாவது இடத்தை மூன்று முடிச்சு சீரியல் பெற்றுள்ளது. இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்தே அனைவராலும் கவரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.அதுவும் குறிப்பாக தற்போது சூர்யா நந்தினியின் கழுத்தில் தாலி கட்டிவிட சுந்தரவல்லி என்ன செய்யப் போகிறார் என்ற பரபரப்பான கதைகளத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் முதலிடத்திற்கு வர அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மூன்றாவது இடத்தை சிங்க பெண்ணே சீரியல் பிடித்துள்ளது. அன்பு ஆனந்தியிடம் சொல்லப் போகும் உண்மைக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நான்காவது இடத்தை இரண்டு சீரியல்கள் பெற்றுள்ளன.அதாவது மருமகள் சீரியலும் சுந்தரி சீரியலும் தான். அதாவது மருமகள் சீரியலில் ஆதிரை மற்றும் பிரபு திருமணம் குறித்தும், சுந்தரி சீரியலில் சுந்தரி மற்றும் வெற்றி திருமணம் குறித்தும் கதை நகர்ந்து வருகிறது.
ஐந்தாவது இடத்தை சிறகடிக்க ஆசை பிடித்துள்ளது. இந்த சீரியலில் சத்தியா தவறை உணர்ந்து முத்துவின் உண்மை மனதை புரிந்து கொள்ள கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
ஆறாவது இடத்தை ராமாயணம் பிடித்துள்ளது. சீதையை ராவணன் கடத்தி வைத்திருக்க அவரிடமிருந்து சீதா தேவியை எப்படி ராமர் காப்பாற்றப் போகிறார் என்ற கதையுடன் நகர்ந்து வருகிறது.
ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் மல்லி தொடர் உள்ளது.
ஒன்பதாவது இடத்தில் சின்ன மருமகள் உள்ளது. அப்பாவை அரெஸ்ட் பண்ணதுக்கு காரணம் தமிழ் தான் என்ற உண்மையை தெரிந்து கொண்ட குடும்பம் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறது தேர்தல் பிரச்சாரத்தில் மாமனாருக்கு உதவியாக இருந்து வருகிறார்.
இந்த வாரம் தொடர்ந்து நான்கு இடங்களைப் பிடித்து சன் டிவி டிஆர்பி யில் முன்னேறி இருக்கிறது. அடுத்த வாரம் எந்தெந்த சீரியல் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்று பார்க்கலாம்.