தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எக்கச்சக்கமான திரைப்படங்கள் வெளியாகின்றன. சிறு பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை பல படங்கள் வெளியானாலும் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பையும் வசூலையும் பெறுகின்றன.
அப்படி இந்த 2022 ஆம் ஆண்டில் இதுவரை வெளியாகி தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்த திரைப்படங்கள் குறிப்பிட்ட சில மட்டுமே உள்ளன. அப்படியான ஐந்து திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படம் தமிழகத்தில் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது.
2. தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் தமிழகத்தில் 100 கோடி வசூலை தாண்டியது.
3. கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வரவேற்பு பெற்று 500 கோடி வசூலை பெற்றது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் வெகுவிரைவில் 100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.
4. மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் தற்போது வரை ரூபாய் 350 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் தமிழகத்தில் 100 கோடியை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.
5. கன்னட ராக் ஸ்டார் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையாடியது. தமிழகத்தில் இந்த படத்தின் வசூல் நூறு கோடியை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.