தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி சீரியல்களின் வெற்றியை அதன் டிஆர்பி ரேட்டிங்கை வைத்துத்தான் கூறி வருகிறோம். ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் விறுவிறுப்பை கொண்டு இந்த ரேட்டிங் மாறிக்கொண்டே இருக்கும்.
ஆனால் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கயல் சீரியல் முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் முதலிடத்தை தொடர்ந்து பிடித்துள்ளது கயல் சீரியல்.
அதற்கு அடுத்த இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் வானத்தைப்போல மற்றும் சுந்தரி ஆகிய சீரியல்கள் பிடித்துள்ளன. இதனையடுத்து நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி மற்றும் பாரதிகண்ணம்மா சீரியல் இடம் பிடித்துள்ளன.
பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வரும் நிலையிலும் 4-வது இடம் தான் பிடிக்க முடிந்துள்ளது.