தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி பண்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆரம்பத்தில் விஜய்டிவிசீரியல் காலமே பாரதிகண்ணம்மா, பாக்கியலட்சுமி போன்றவை Trp-ல் நல்ல இடத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது மொத்தமாக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.
சன்டிவியில் ஒளிபரப்பாகும் 5 சீரியல்களில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. முதலிடத்தில் கயல் சீரியல் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து 2வது இடத்தில் படு விறுவிறுப்பாக ஒளிபரப்பாக தொடங்கியுள்ள சுந்தரி சீரியல் பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்தினை ரோஜா சீரியல் பிடித்துள்ளது. இதனையடுத்து நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் வானத்தைப் போல மற்றும் கண்ணான கண்ணே ஆகிய சீரியல்கள் பிடித்துள்ளன.
ஆறாவது இடத்தில் பாக்கியலட்சுமி ஏழாவது இடத்தில் பாரதிகண்ணம்மா எட்டாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என மொத்தமாக விஜய் டிவி சீரியல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. கதையில் பெரிதாக விறுவிறுப்பு இல்லாமல் லாஜிக் இல்லாமல் பயணிப்பதே விஜய் டிவி சீரியல்கள் பின்னுக்குத் தள்ளப்பட காரணம் என சொல்லப்படுகிறது.