தமிழ் சினிமாவில் நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு சரியான முறையில் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் அவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் குற்றம் சாட்டி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ரெட் கார்ட் போடப்படும் வழக்கம் இரண்டு வருகிறது.
நடிகர் சிம்பு வடிவேல் போன்ற நடிகர்கள் இந்த ரெட் கார்ட் பிரச்சனையில் சிக்கி பல வருடங்கள் நடிக்காமல் இருந்து வந்தது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் தற்போது ஐந்து தமிழ் நடிகர்களுக்கு ரெட் கார்ட் போடப்பட வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
நடிகர் சிம்பு, விஷால், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு மற்றும் அதர்வா பிடித்த நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் சரியான முறையில் ஒத்துழைப்பு தராத காரணத்தினாலும் இவர்களுக்கு படங்களுக்கு ஒத்துழைப்பு தரப்போவதில்லை என திரைப்பட தயாரிப்பாளர்களின் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் இது ஐந்து நடிகர்களுக்கும் ரெட் கார்ட் போட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.