தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சேனல்கள் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. டிஆர்பி ரேட்டிங்கை பொருத்தவரை சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல் இடையே தற்போது கடுமையான போட்டி நிலவி வரும். இந்த இரண்டு சங்கத் தமிழ் சீரியல்கள்தான் மாறி மாறி டாப் 5 லிஸ்டில் வரும்.
ஆனால் சமீபகாலமாக விஜய் டிவி சீரியல்களில் கதை இல்லாமல் நகர்ந்து வரும் காரணத்தினால் டிஆர்பியில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளன. டாப் 5 லிஸ்டில் ஐந்தாவது இடத்தில் மட்டும் பாரதிகண்ணம்மா சீரியல் இடம் பிடித்துள்ளது.
முதல் 4 இடங்களையும் சன் டிவி சீரியல்கள் தக்க வைத்துள்ளன. அதிலும் குறிப்பாக கயல் சீரியல் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது. இதோ அந்த லிஸ்ட்
1. கயல்
2. சுந்தரி
3. வானத்தை போல
4. ரோஜா
5. பாரதி கண்ணம்மா
பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2 சீரியல்கள் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது டாப் 5 லிஸ்ட்டில் இருந்து பின்னுக்கு தள்ளிப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.