கதாநாயகியை மையப்படுத்தி உருவான கதையில் சமந்தாவும் ராஷ்மிகா மந்தனாவும் அக்கா தங்கையாக நடிக்க உள்ளனர். நடிகை சமந்தா தற்போது நிறைய படங்களில் கமிட்டாகியுள்ளார் தற்போது அஸ்வின் சரவணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.
அண்மையில் தெலுங்கு பிரபல இயக்குனர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்த கதை ஒன்றை சமந்தா நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் சமந்தா. ஏனென்றால் சமந்தா நடிப்பதற்கு அதிக ஸ்கோப் உள்ள கதை என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில்சமந்தாவுடன் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்க இருக்கிறார். இவர் தெலுங்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர்கள் இவரை தெலுங்கு உலகின் ஹீரோயின் என்று கருதுவர்.
ஏனென்றால் அண்மையில் இவரது படங்கள் அனைத்தும் பெரிய ஹிட்டானது காரணம். தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற படத்தில் அறிமுகமான அவர், டியர் காம்ரேட், மகேஷ்பாபுவுடன் சரிலேரு நீக்கெவரு, நிதினுடன் பீஷ்மா படங்களில் நடித்தார். இப்போது அல்லு அர்ஜூன் ஜோடியாக, புஷ்பா படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்கிடையே சமந்தாவே, அட்டகாசமான நடிகை. அவருடன் ராஷ்மிகா மந்தனாவும் சேர்ந்தால் கேட்கவே வேண்டாம் என்கிறார்கள் ரசிகர்கள். இந்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.