Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நயன்தாரா இடத்தை பிடிக்கும் பிரபல சென்சேஷண் பட நடிகை.. நயன்தாராவின் மார்கெட் சரிந்ததா?

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் கதாநாயகிகளில் லேடி சூப்பர் ஸ்டார் என பெரிதும் கொண்டாடப்பட்டு வரும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான்.

இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இணைந்து நடித்து உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் கொரோனா தாக்கம் குறைந்த பின் வெகுவிரைவில் வெளியிடப்படும்.

தமிழ் சினிமாவை மார்க்கெட்டை பொறுத்தவரை அழிக்கமுடியாத ஒரு மார்க்கெட்டை உருவாக்கி இருக்கிறார் நடிகை நயன்தாரா.

இந்நிலையில் தற்போது நயன்தாராவின் மார்க்கெட்டை பின்னுக்கு தள்ளும் அளவிற்கு பிரபல சென்சேஷன் பட நடிகை டாப்ஸி வளர்ந்து வருகிறார் என்று பிரபல முக்கிய பத்திரிகையாளர் ஒரு தனது YouTube சேனலில் கூறியுள்ளார்.

மேலும் டாப்ஸி பாலிவுட்டில் தற்போது முன்னணி உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். மற்றும் தமிழிலும் பெரிதும் இனி கேம் ஓவர் உள்ளிட்ட படங்களை போல் கவனத்தை செலுத்தி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.