Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தேனிலவில் காஜல் செய்த காரியத்தால் கடுப்பான ரசிகர்கள்

Tough fans for what Kajal did on honeymoon

காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. மும்பையில் நடந்த திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் அனைவரையும் அழைக்க முடியவில்லை என்றார் காஜல். திருமணமான மறுநாள் தன் கணவருடன் புது வீட்டில் குடியேறினார். அதன் பிறகு கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார் காஜல்.

மாலத்தீவுகளில் காஜலின் போட்டோகிராஃபராகிவிட்டார் கவுதம் கிட்ச்லு. காஜலை அழகாக புகைப்படம் எடுக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். எப்பொழுது பார்த்தாலும் வேலை, ஒர்க்அவுட், யோகா என்று பிசியாக இருந்த காஜல் அகர்வாலால் மாலத்தீவுகளில் சும்மா இருக்க முடியவில்லை.

இதையடுத்து யோகா செய்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் காஜல். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தேனிலவில் போய் யோகா, ஒர்க்அவுட்டுனு அநியாயம் பண்றீங்களே. கணவருடன் நேரம் செலவிடுங்கள்.

அந்த மனிதர் பாவம், போட்டோ எடுத்தே அலுத்துப் போய்விடுவார் போன்று. மும்பை வந்த பிறகு யோகா செய்யலாம். தற்போது கவுதமுக்கு நேரம் ஒதுக்குங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.